search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாடா அல்ட்ராஸ்"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #TataAltroz



    டாடா அல்ட்ராஸ் ப்ரோடோடைப் வாகனம் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமான அல்ட்ராஸ் கார் ஏற்கனவே 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா 45X என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இதில் புதிய அல்ட்ராஸ் கார் இந்த பிரிவில் கிடைக்கும் கார்களில் அதிக ஸ்டைலானதாக இருக்கும் என தெரிகிறது. காரின் முன்புற கிரில் சற்று உள்புறம் அகலமாக உருவாக்கப்பட்டு, ஸ்வெப்ட் பேக் லேம்ப்களை கொண்டிருக்கிறது. இத்துடன் இன்டென்டட் டெயில்கேட், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    டாடா அல்ட்ராஸ் கார் அட்வான்ஸ்டு மாட்யூலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஆல்ஃபா என அழைக்கப்படும் இந்த கார் டாடாவின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவாகியிருக்கிறது. 45X சாந்து உருவாகியிருக்கும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாருதி சுசுகி பலேனோ, ஹோன்டா ஜாஸ் மற்றும் ஹூன்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமையும்.



    புதிய அல்ட்ரோஸ் கார் நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 110 பி.எஸ். பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் மோட்டார் 110 பி.எஸ். பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது அல்ட்ரோஸ் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமான அல்ட்ரோஸ் காரில் 5-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: Cartoq
    ×